உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / புதுச்சேரி தமிழ் சங்கத்தில் ராணுவ மண் கலச யாத்திரை

புதுச்சேரி தமிழ் சங்கத்தில் ராணுவ மண் கலச யாத்திரை

புதுச்சேரி : அகில இந்திய யாதவ் மகாசபை சார்பில், ராணுவ மண் கலச யாத்திரைக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி புதுச்சேரி தமிழ் சங்கத்தில் நடைபெற்றது. அகில இந்திய யாதவ் மகாசபை சார்பில் ராணுவ மண் கலச யாத்திரை புதுச்சேரி ரெயின்போ நகர், பிரெஞ்ச் கார்னர் அருகில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு, தமிழ் சங்கத்தை சென்றடைந்தது. அங்கு நடந்த விழாவில், அமைச்சர் லட்சுமிநாராயணன், தேசிய செயல் தலைவர் (தெற்கு) சோம்பிரகாஷ், புதுச்சேரி யாதவ் முன்னேற்ற சங்க தலைவர் ரவி, செயலாளர் மூர்த்தி, பொருளாளர் வரதராசு, அகில இந்திய யாதவ மகாசபை தேசிய செயலாளர் பாஸ்கர் உட்பட பலர் ராணுவ மண் கலசத்திற்கு மரியாதை செலுத்தினர். தமிழ்சங்க செயலா ளர் மோகன்தாஸ், அகில இந்திய யாதவ மகாசபை கோரிக்கையான ஆஹீர் ரெஜிமென்ட் அடைவதற்காக கடந்த ஏப்., 23ம் தேதி முதல் பீகாரில் இருந்து 1 லட்சம் கி.மீ., சுற்றுப்பயணம் நடப்பதாகவும், தற்போது இந்த மண் கலசம் யாத்திரை புதுச்சேரி வந்துள்ளதாக தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை