உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மில் உரிமையாளர் துாக்கிட்டு தற்கொலை

மில் உரிமையாளர் துாக்கிட்டு தற்கொலை

திருக்கனுார் : சந்தை புதுக்குப்பத்தில் பிளவர் ஆயில் மில் உரிமையாளர் திருமணம் ஆகாத ஏக்கத்தில் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். காட்டேரிக்குப்பம் அடுத்த சந்தை புதுக்குப்பம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் ஆதிமூலம், 45; லிங்காரெட்டிப் பாளையத்தில் பிளவர் ஆயில் மில் நடத்தி வந்தார். ஆதிமூலத்திற்கு திருமணம் ஆகவில்லை. இதனால், விரக்திடையந்த அவர் நேற்று முன்தினம் சந்தை புதுக்குப்பம் வீடூர் வாய்க்கால் கரையோரம் உள்ள வேப்ப மரத்தில் துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டனர். தகவலறிந்த காட்டேரிக்குப்பம் போலீசார் ஆதிமூலம் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அவரது சகோதரர் கோவிந்தன் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்