உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  திடீரென சரிந்து விழுந்த மினிமாஸ் மேட்டுப்பாளையத்தில் பரபரப்பு

 திடீரென சரிந்து விழுந்த மினிமாஸ் மேட்டுப்பாளையத்தில் பரபரப்பு

புதுச்சேரி: மேட்டுப்பாளையத்தில் திடீரென மினி மாஸ் விளக்கு விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மேட்டுப்பாளையம் ஐ.டி.ஐ., அருகே ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சாலையில் அமைக்கப்பட்டுள்ள மினி மாஸ் விளக்கில் ஒன்று நேற்று மாலை 6:30 மணியளவில் சரிந்து விழுந்தது. அவ்வழியாக யாரும் செல்லாததால், அதிர்ஷ்டவசமாக பொதுமக்கள் உயிர் தப்பினர். அப்பகுதி மக்கள் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக மின் இணைப்பு துண்டித்தனர். பின் சாலையோரம் அகற்றி வைத்தனர். ஏற்கனவே கனமழையில் மதில் சுவர் விழுந்து ஒரு உயிர் பலியான நிலையில் மினிமாஸ் விளக்கும் விழுந்தது அப்பகுதியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Vasan
ஆக 08, 2026 06:27

Even after falling down, 5 lamps are glowing well out of 6. So, electrically strong, but civil foundation weak, or foundation bolts not tightened. Was the lamp post hit by any vehicle? CCTV footage to be seen. Were all the foundation bolts provided? All such lamp posts should be checked immediately to see whether such unsafe condition exists in them also due to unsafe act by concerned erection team.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை