உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / இலவச மருத்துவ முகாம் அமைச்சர் துவக்கி வைப்பு

இலவச மருத்துவ முகாம் அமைச்சர் துவக்கி வைப்பு

திருக்கனுார்: மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து சார்பில், இருவார துாய்மை விழாவையொட்டி சிறப்பு இலவச மருத்துவ முகாமை அமைச்சர் நமச்சிவாயம் துவக்கி வைத்தார். புதுச்சேரி நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்துகளில் இரு வார துாய்மை விழா நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து சார்பில், சிறப்பு இலவச மருத்துவ முகாம் பி.எஸ்.பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. முகாமிற்கு ஆணையர் எழில்ராஜன் தலைமை தாங்கினார். அமைச்சர் நமச்சிவாயம் பங்கேற்று மருத்துவ முகாமை துவக்கி வைத்து, பரிசோதனை செய்து கொண்டார். முகாமில், மணக்குள விநாயகர் மருத்துவ கல்லுாரி மருத்துவ குழுவினர் பங்கேற்று, பொது மருத்துவம், சர்க்கரை, ரத்த அழுத்தம், பல் பரிசோதனை மற்றும் சிகிச்சைகள் அளித்தனர். இதில், கொம்யூன் பஞ்சாயத்தில் பணிபுரியும் ஊழியர்கள், துப்புரவு பணியாளர்கள மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு பரிசோதனை செய்து கொண்டனர். முகாமில், உதவி பொறியாளர் மல்லிகார்ஜூனா, சச்சிதானந்தம் மற்றும் ஊழியர்கள் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ