உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ரேபிஸ் நோய் தடுப்பூசி முகாம் அமைச்சர் துவக்கி வைப்பு

ரேபிஸ் நோய் தடுப்பூசி முகாம் அமைச்சர் துவக்கி வைப்பு

வில்லியனுார் : கால்நடை பராமரிப்பு மற்றும் கால்நடை நலத்துறை சார்பில் நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி முகாமை அமைச்சர் துவக்கி வைத்தார். புதுச்சேரியில் அதிகரித்து வரும் நாய்க்கடியை கட்டுப்படுத்த கால்நடை துறைபல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக தெரு நாய் மற்றும் வீட்டில் வளர்க்கும் நாய்களுக்கு ரேபிஸ் நோய் தடுப்பூசி முகாம்களை நடத்திவருகின்றனர். கால்நடை பராமரிப்பு மற்றும் கால்நடை நலத்துறை மூலம்மத்திய அரசின் 'சேவா பக்வாடா' சார்பில் மேல்சாத்தமங்கலம் கிராமத்தில் நேற்று நாய்களுக்கு ரேபிஸ்தடுப்பூசி போடும் முகாம் நடந்தது. முகாமை, அமைச்சர் தேனீ ஜெயக்குமார் துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் கால்நடைத்துறைஇயக்குநர் லதாமங்கேஷ்கர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டார். முகாமில் கால்நடை மருத்துவர் மோகன் தலைமையிலான மருத்துவ குழுவினர் 30க்கும் மேற்பட்ட நாய்களுக்குதடுப்பூசி போட்டனர். மங்கலம் தொகுதியில் பல்வேறு இடங்களில்இந்த முகாம் நடைபெற உள்ளது. முகாமிற்கன ஏற்பாடுகளை வில்லியனுார் கால்நடை மருத்துவமனை டாக்டர் ஆனந்தராமன்மேற்பார்வையில் மருத்துவமனை ஊழியர்கள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை