மேலும் செய்திகள்
கைப்பந்து மைதானம் அமைக்கும் பணி துவக்கம்
11-Nov-2025
திருக்கனுார்: திருக்கனுாரில் கொம்யூன் பஞ்சாயத்து மூலம் தார் சாலை அமைக்கும் பணியை அமைச்சர் நமச்சிவாயம் துவக்கி வைத்தார். மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து சார்பில், எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதி ரூ. 27 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பில் திருக்கனுார் சர்புன்னிசா நகரில் தார் சாலை அமைத்தல் மற்றும் பாரதி பள்ளி வீதியில் 'ப' வடிவ கழிவுநீர் வாய்க்காலை மேம்படுத்தும் பணிக்கான பூமி பூஜை நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு, அமைச்சர் நமச்சிவாயம் தலைமை தாங்கி, பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார். முன்னாள் எம்.எல்.ஏ., அருள்முருகன், பா.ஜ., மாநில செயற்குழு உறுப்பினர் முத்தழகன், கொம்யூன் ஆணையர் எழில்ராஜன், உதவி பொறியாளர் மல்லிகார்ஜூனன், இளநிலை பொறியாளர் மனோகரன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
11-Nov-2025