மேலும் செய்திகள்
மங்கலம் தொகுதியில் சாலை பணிக்கு பூமி பூஜை
08-Nov-2025
வில்லியனுார்: பொதுப்பணித்துறை சார்பில் மங்கலம் கிராமத்தில் கழிவுநீர் வாய்க்கால் அமைப்பதற்கு வேளாண் அமைச்சர் பூமி பூஜை செய்து பணிகளை துவக்கிவைத்தார். புதுச்சேரி பொதுப்பணித்துறை கட்டடங்கள் மற்றும் சாலைகள் தெற்கு கோட்டம் சார்பில் ரூ. 84:56 லட்சம் திட்ட மதிப்பீட்டில் மங்கலம் கிராமத்தில் 'ப' வடிவ கழிவுநீர் வாய்க்கால் அமைக்கும் பணிக்கு பூமி பூஜை விழா நேற்று நடந்தது. விழாவில் பங்கேற்ற வேளாண்துறை அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் பூமி பூஜை செய்து பணிகளை துவக்கிவைத்தார். இந்நிகழ்ச்சயில் புதுச்சேரி பொதுப்பணித்துறை கட்டடங்கள் மற்றும் சாலைகள் தெற்கு கோட்டம் செயற்பொறியாளர் சந்திரகுமார், நடராஜன், இளநிலைப் பொறியாளர் கார்த்திக் ஒப்பந்ததாரர் மற்றும் மங்கலம் கிராம என்.ஆர்.காங்., பிரமுகர்கள் மகளிர் குழுவினர்கள் கலந்துகொண்டனர்.
08-Nov-2025