மேலும் செய்திகள்
தொகுதி மேம்பாட்டு பணி ஆலோசனை கூட்டம்
1 minute ago
இன்றைய மின்தடை
1 minute ago
கழிவுநீர் வாய்க்கால் பணி: எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
2 minutes ago
இடிந்து விழும் மதில்… பெயர்ந்து சிதறும் கண்ணாடி…
2 minutes ago
வில்லியனுார்: பங்கூர் கிராமத்தில் புதிய போர்வல் அமைக்கும் பணியை வேளாண் அமைச்சர் தேனீ ஜெயக்குமார் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார். புதுச்சேரி பொதுப்பணித்துறை பொது சுகாதார கோட்டம் சார்பில், ரூ. 30:97 லட்சம் திட்ட மதிப்பில் மங்கலம் தொகுதி, பங்கூர் கிராம மாரியம்மன் கோவில் தெருவில் புதிய ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியை வேளாண்துறை அமைச்சர் தேனீ ஜெயக்குமார் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் பொதுசுகாதாரக் கோட்ட கிராம குடிநீர்த்திட்ட உதவிப்பொறியாளர் பீனாராணி, இளநிலைப் பொறியாளர்கள் சுதர்சனம், கார்த்திக், வில்லியனுார் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ரமேஷ், உதவிப்பொறியாளர் சத்தியநாராயணன், இளநிலைப் பொறியாளர் ரங்கமண்ணார் உட்பட பலர் பங்கேற்றனர். புதிய போர்ெவல் மூலம் பங்கூர் கிராமத்தின் சுற்றுவட்டார பகுதிகளில் வசிக்கும் 3 ஆயிரம் குடும்பங்கள் பயன் பெறுவர்.
1 minute ago
1 minute ago
2 minutes ago
2 minutes ago