உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / புதிய ரேஷன் கார்டு அமைச்சர் வழங்கல் 

புதிய ரேஷன் கார்டு அமைச்சர் வழங்கல் 

திருக்கனுார், ஜூலை 11-மண்ணாடிபட்டு தொகுதியைச் சேர்ந்த பயனாளிகளுக்கு புதிய ரேஷன் கார்டுகளை அமைச்சர் நமச்சிவாயம் வழங்கினார்.மண்ணாடிப்பட்டு தொகுதி திருக்கனுாரில் உள்ள உள்துறை அமைச்சர் இல்லத்தில் புதிய மஞ்சள் மற்றும் சிவப்பு ரேஷன் கார்டுகள் வழங்கும் விழா நடந்தது.விழாவிற்கு, தொகுதி எம்.எல்.ஏ.,வும் அமைச்சருமான நமச்சிவாயம் தலைமை தாங்கி, 100க் கும் மேற்பட்ட பயனாளி களுக்கு ரேஷன் கார்டுகளை வழங்கினார்.இதில், பா.ஜ., பிரமுகர் முத்தழகன், மண்ணா டிப்பட்டு கொம்யூன் ஆணையர் எழில்ராஜன், நிர்வாகிகள் கண்ணன், செல்வக்குமார், லோகு, ஜெயக்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !