உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  சிலம்பம் பயிற்சி முகாம் அமைச்சர் பங்கேற்பு

 சிலம்பம் பயிற்சி முகாம் அமைச்சர் பங்கேற்பு

திருக்கனுார்: புதுச்சேரி மணி பாலகிருஷ்ண வீர விளையாட்டு கழகம் சார்பில் சிலம்பம் பயிற்சி முகாம் காட்டேரிக்குப்பம், இந்திராகாந்தி அரசு உயர்நிலைப் பள்ளியில் நடந்தது. முகாமிற்கு, அமைச்சர் நமச்சிவாயம் தலைமை தாங்கி, பயிற்சியில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினார். பா.ஜ., மாநில செயற்குழு உறுப்பினர் முத்தழகன் முன்னிலை வகித்தார். முகாமில் லோகு, முன்னாள் ராணுவ வீரர் ராமதாஸ், அக்னி வித்யா கேந்திரா பள்ளி தாளாளர் பாஸ்கர், பயிற்சியாளர்கள் சங்கர், இளங்கோ, முத்துக்குமரன், சுரேந்தர், சாதனா உள்ளிட்ட 80க்கும் மேற்பட்ட அரசு பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை ராஜா, சிவக்குமார், ஜெயக்குமார், சிதம்பரநாதன், நாஞ்சில் மனோகர், ஏழுமலை, ரவி, மோகன்ராஜ், இளவழுதி ஆகியோர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை