உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / காரைக்காலை முதன்மை மாவட்டமாக மாற்றுவேன் அமைச்சர் திருமுருகன் நம்பிக்கை

காரைக்காலை முதன்மை மாவட்டமாக மாற்றுவேன் அமைச்சர் திருமுருகன் நம்பிக்கை

புதுச்சேரி: 'காரைக்காலை முதன்மை மாவட்டமாக மாற்றுவேன்' என, புதுச்சேரியில் புதிய அமைச்சராக பொறுப்பேற்ற திருமுருகன் தெரிவித்தார். அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:என் மீது நம்பிக்கை வைத்து அமைச்சர் பதவி வழங்கிய, முதல்வர் ரங்கசாமிக்கு நன்றி. காரைக்கால் பின் தங்கிய மாவட்டமாக உள்ளது. குறிப்பாக மருத்துவம், விவசாயம், சுற்றுலா ஆகியவற்றில் பின் தங்கி இருக்கிறது. இதற்காக பல முயற்சிகள் மேற்கொண்டும், வளர்ச்சி அடையவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. இதை கருத்தில் கொண்டு, தேவையான அனைத்து திட்டங்களையும் கொண்டு வந்து, முதன்மை மாவட்டமாக மாற்றுவேன். காரைக்காலில், எந்தெந்த இடத்தில், என்னென்ன பிரச்னைகள் உள்ளது என நன்றாக தெரியும். அதை சரி செய்து, திட்டங்கள் சரியான முறையில் மக்களை சென்றடைவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி