உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கடற்கரை கிராமங்களில் அமைச்சர் பார்வை

கடற்கரை கிராமங்களில் அமைச்சர் பார்வை

புதுச்சேரி : கடற்கரை கிராமங்களில் அமைச்சர் லட்சுமிநாராயணன் கடல் சீற்றத்தை பார்வையிட்டார்.பெங்கல் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அமைச்சர் லட்சுமி நாராயணன், ராஜ்பவன் தொகுதி குருசுக்குப்பம், வைத்திக்குப்பம், முத்தியால்பேட்டை தொகுதி சோலைநகர், காலாப்பட்டு தொகுதிக்குட்பட்ட கடற்கரை மீனவ கிராமங்களான பிள்ளைச்சாவடி, சின்னக்காலாப்பட்டு, பெரியகாலாப்பட்டு, கணபதி செட்டிக்குளம் உள்ளிட்ட மீனவ கிராமங்களின் கடல் சீற்றத்தை பார்வையிட்டார்.எம்.எல்.ஏ.,க்கள் கல் யாணசுந்தரம், பிரகாஷ் குமார், கலெக்டர் குலோத்துங்கன், பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் தீனதயாளன், கண் காணிப்பு பொறியாளர் பாலசுப்ரமணியன், மீன்வளத் துறை இணை இயக்குனர் தெய்வ சிகாமணி, அதிகாரிகள் ஆகியோர் உடனிருந்தனர்.அப்போது மீனவர்களை கடலுக்கு செல்ல வேண்டாம். கடலோரத்தில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மீனவர்களை பாதுகாப்பான பகுதிக்கும் செல்லுங்கள். படகுகளை பாதுகாப்பான பகுதியில் நிறுத்தி வைக்க ஆகும் செலவை மீன்வளத் துறை ஏற்கும் என அமைச்சர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை