உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மீன்பிடி துறைமுகம் பணி; அமைச்சர் பார்வை

மீன்பிடி துறைமுகம் பணி; அமைச்சர் பார்வை

அரியாங்குப்பம்; வீராம்பட்டினத்தில் 57 கோடி ரூபாயில் அதிநவீன வசதிகளுடன் கூடிய மீன்பிடி துறைமுகம் அமைக்கும் பணியை, அமைச்சர் லட்சுமிநாராயணன் பார்வையிட்டார்.அரியாங்குப்பம் அடுத்த வீராம்பட்டினம் முகத்துவாரத்தில், 57 கோடி ரூபாய் மதிப்பில், அதிநவீன வசதிகளுடன் கூடிய மீன்பிடி துறைமுகம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த துறைமுகத்தில், 160 விசைப் படகுகள், 200 பைபர் படகுகள் நிறுத்தும் அளவிற்கு பணிகள் நடந்து வருகிறது.மேலும், படகுகள் பழுதுநீக்கும் மையம், கேண்டீன், குடிநீர் சுத்திகரிப்பு நிலையம், ஏலக்கூடம், வலை பின்னும் கூடம், அதிநவீன கழிவறைகள் அமைக்கப்பட உள்ளது. மேலும், 1.20 கோடியில், மீனவர்கள் பயன்பெறும் வகையில்,பெட்ரோல், டீசல், பங்கு அமைக்கப்படுகிறது.அங்கு நடந்து வரும் கட்டுமான பணியை, அமைச்சர் லட்சுமிநாராயணன் நேற்று பார்வையிட்டார். அப்போது, பாஸ்கர் எம்.எல்.ஏ., பொதுப்பணித்துறை அதிகாரிகள், விசைப்படகு உரிமையாளர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை