மேலும் செய்திகள்
கடற்கரையில் துாய்மை பணி
21-Sep-2026
புதுச்சேரி: புதுச்சேரி கடற்கரையில் தவறவிட்ட கைப்பையில் இருந்த பணம் மற்றும் பொருட்களை போலீசார் உரியவரிடம் ஒப்படைத்தார். புதுச்சேரி கடற்கரை, தலைமை செயலகம் எதிரே கடலோர காவல்படை பிரவீன், லைப் கார்டு ரமேஷ் ஆகியோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது, ரூ. 60 ஆயிரம் மதிப்பிலான மொபைல், 20 ஆயிரம் ரொக்கம் மற்றும் வாட்ச் உள்ளிட்ட பொருட்கள் இருந்து கைப்பை கீழே கிடந்தது. இதையடுத்து, கடலோர போலீசார் கைப்பை யாருடையது என விசாரணை நடத்தியதில், அதில், திருப்பூரில் இருந்து புதுச்சேரி சுற்றுலா வந்த 5 கல்லுாரி மாணவர்கள் தவறவிட்டது தெரியவந்தது. இதையடுத்து, அவர்களை கடற்கரைக்கு வரவழைத்து கைப்பையில் இருந்த பொருட்கள் சரியாக உள்ளதா என சோதனை செய்து ஒப்படைத்தனர்.
21-Sep-2026