வாசகர்கள் கருத்துகள் ( 1 )
மனித உயிர்களை விட விலங்குகள்தான் முக்கியம் என வருபவர்களுக்கும் கருத்தடை பற்றி ஆலோசிக்கலாம்.
வில்லியனுார்: வில்லியனுார் பகுதியில் நாய், மாடுகள் மற்றும் பன்றிகளை கட்டுப்படுத்துவது குறித்து எம்.எல்.ஏ., கொம்யூன் பஞ்சாயத்து அதிகாரிகள்ஆலோசனை நடத்தினார். வில்லியனுார் எம்.எல்.ஏ., அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு சிவா எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். ஆணையர் பிரபாகரன், உதவி பொறியாளர் உட்பட பலர் பங்கேற்றனர். கூட்டத்தில்,வில்லியனுார் தொகுதியில் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்களை அச்சுறுத்தும் வகையில் சுற்றித் திரியும் தெரு நாய்களை பிடித்து கருத்தடை செய்துவது. குடியிருப்பு பகுதியில் திரியும் பன்றிகள் மற்றும் சாலையில் திரியும் மாடுகளை கட்டுப்படுத்தும் வகையில் வளர்ப்போருக்கு பொது இடங்களில் விட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என, எச்சரிக்கை கடிதம் அனுப்புவது. அதற்கும் கட்டுப்படாமல் சாலைகளில் கால்நடைகளை விடும்உரிமையாளர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுப்பது. தொற்று நோய் பரப்பும் வகையில் குடியிருப்பு பகுதிகளில் சுற்றித் திரியும் பன்றிகளை பிடித்து வனப்பகுதியில் விடுவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. சகாபுதீன்,அல்லாபிச்சை, தி.மு.க.,நிர்வாகிகள்மணிகண்டன், இளஞ்செழியப்பாண்டியன், ஜலால் ஹனீப் உட்பட பலர் பங்கேற்றனர்.
மனித உயிர்களை விட விலங்குகள்தான் முக்கியம் என வருபவர்களுக்கும் கருத்தடை பற்றி ஆலோசிக்கலாம்.