கோவில் பணிக்கு எம்.எல்.ஏ., ரூ.1 லட்சம்
அரியாங்குப்பம்: முருங்கப்பாக்கம் கோவில் திருப்பணிக்காக, 1 லட்சம் ரூபாய் நிதியை, எம்.எல்.ஏ., பாஸ்கர், கோவில் நிர்வாகத்திடம் வழங்கினார்.முருங்கப்பாக்கம் அங்காளம்மன் கோவில் பின்புறம் உள்ள சிவன் மற்றும் அய்யனாரப்பன் கோவில் உள்ளது. இக்கோவில் திருப்பணிக்காக பந்தகால் நடும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.அதில், சிறப்பு விருந்தினராக, அரியாங்குப்பம் எம்.எல்.ஏ., பாஸ்கர், கலந்து கொண்டார். அதனை தொடர்ந்து, திருப்பணிக்காக எம்.எல்.ஏ., தனது சொந்த நிதியில் இருந்து, 1 லட்சம் ரூபாய் நிதியை, கோவில் நிர்வாகத்திடம் வழங்கினார்.