உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பங்கூர் ஏரி துார்வாரும் பணி: எம்.எல்.ஏ., துவக்கிவைப்பு

பங்கூர் ஏரி துார்வாரும் பணி: எம்.எல்.ஏ., துவக்கிவைப்பு

வில்லியனுார்: பங்கூர் ஏரி துார் வாரும் பணியை ரவிக்குமார் எம்.எல்.ஏ., பூமி பூஜை செய்து துவக்கிவைத்தார். புதுச்சேரி அரசு ஏரி, குளங்களை தூர்வாரி ஆழப்படுத்தி மழை நீர் சேமிக்க திட்டமிட்டுள்ளனர். இதனால் விவசாயிகளும், நிலத்தடி நீர்மட்டம் உயர்த்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை செய்து வருகின்றது. அதன் ஒரு பகுதியாக மங்கலம் தொகுதி பங்கூர் கிராமத்தில் உள்ள ஏரியை பொதுப்பணித்துறை சார்பில் ரூ. 23:20 லட்சம் திட்ட மதிப்பீட்டில் துார்வாரி ஏரியை ஆழப்படுத்தும் பணி மேற்கொண்டனர். முதலமைச்சர் ரங்கசாமி உத்தரவின் பேரில் ரவிக்குமார் எம்.எல்.ஏ., நேற்று பூமி பூஜை செய்து ஏரி துார்வாரும் பணியை துவக்கிவைத்தார். இந்நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை நீர்ப்பாசனக் கோட்ட செயற்பொறியாளர் ராஜ்குமார், உதவிப் பொறியாளர் ஸ்ரீநாத், இளநிலைப் பொறியாளர் அருள்முருகன், மங்கலம் தொகுதி என்.ஆர்.காங்., நிர்வாகிகள் முன்னாள் சேர்மன் பாலமுருகன், கண்ணபிரான், அர்ச்சுணன், சிவக்குமார், பிரபாவதி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ