உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / வாய்க்கால் துார் வாரும் பணி எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு

வாய்க்கால் துார் வாரும் பணி எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு

திருபுவனை : திருபுவனை தொகுதி, வம்புப்பட்டு ஏரியின் நீர்வரத்து வாய்க்கால், மிகை நீர் வாய்க்கால் மற்றும் சம்போடை வாய்க்கால் ஆகியவற்றை புதுச்சேரி அரசு பொதுப்பணித்துறை நீர்ப்பாசன கோட்டம் சார்பில், ரூ.10.75 லட்சம் செலவில் துார் வாரும் பணிக்கான பூமி பூஜை நடந்தது. அங்காளன் எம்.எல்.ஏ., பூமி பூஜை செய்து, பணியை துவக்கி வைத்தார். பொதுப்பணித்துறை நீர்பாசன கோட்ட செயற்பொறியாளர் ராதாகிருஷ்ணன், உதவிப்பொறியாளர்கள் மதிவாணன், ஸ்ரீநாத், இளநிலைப் பொறியாளர்கள் ஹரிராம், பாலாஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் கிராம முக்கியஸ்தர்கள், ஜே.சி.எம்., மக்கள் மன்ற திருபுவனை தொகுதி நிர்வாகிகள் மற்றும் கிராம பொதுமக்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை