உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / வாய்க்கால் துார்வரும் பணி எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு

வாய்க்கால் துார்வரும் பணி எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு

வில்லியனுார்: ஊசுடேரி மதகு வாய்க்கால்துார் வாரும் பணியை சாய் சரவணன்குமார் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார். புதுச்சேரி பொதுப்பணித்துறை நீர் பாசன கோட்டம் சார்பில், ஊசுடேரியில் இருந்து கூடப்பாக்கம் செல்லும்மேட்டு மதகு வாய்க்கால் பகுதியில் ரூ. 40லட்சம் மதிப்பில் சிமென்ட் கட்டை அமைப்பதற்கும், ஊசுடேரி சேந்தநத்தம் மதகு இரட்டை வாய்க்கால் துார்வாரும் பணிகளையும் சாய்சரவணன் குமார் எம்.எல்.ஏ., பூமி பூஜை செய்து கொடியசைத்து துவக்கி வைத்தார். பொதுப்பணித்துறை நீர்ப்பாசன கோட்ட உதவி பொறியாளர் லுாய்பிரகாசம், இளநிலை பொறியாளர் சிரஞ்சீவி,தொகுதி பா.ஜ., நிர்வாகிகள் சாய்தியாகராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை