உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / வாய்க்கால் துார்வாரும் பணி எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு

வாய்க்கால் துார்வாரும் பணி எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு

புதுச்சேரி : உழவர்கரை தொகுதி திருமலை தாயார் நகர் வழியாக செல்லும் கிளை வாய்க்கால் துார்வாரும் பணியினை சிவசங்கர் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார். பொதுப்பணித்துறை, நீர்பாசன கோட்டம் சார்பில், உழவர்கரை தொகுதி, திருமலை தாயார் நகர் வழியாக செல்லும் கிளை வாய்க்கால் மற்றும் முத்துப்பிள்ளைபாளையம் மெயின் ரோடு, பள்ள வாய்க்கால் ரூ. 3 லட்சத்து 69 ஆயிரம் 750 மதிப்பீட்டில் துார்வாரும் பணிக்கான துவக்க விழா நடந்தது. தொகுதி எம்.எல்.ஏ., சிவசங்கர் தலைமை தாங்கி, வாய்க்கால் துார்வாரும் பணியை பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார். இதில், நீர்பாசன கோட்ட செயற்பொறியாளர் ராதாகிருஷ்ணன், உதவி பொறியாளர் லுாயி பிரகாசம், இளநிலை பொறியாளர் கணேஷ் உள்ளிட்ட அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ