வாய்க்கால் சீரமைக்கும் பணி: எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
: அரியாங்குப்பம்: மணவெளி தொகுதியில் வடிகால் வாய்க்காலை சீரமைக்கும் பணியை, ராமு எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார். மணவெளி தொகுதி தவளக்குப்பம் நான்கு முனை சந்திப்பு, கடலுார் சாலையில் உள்ள வடிகால் வாய்க்காலை சீரமைக்க பொதுப்பணித்துறை மூலம் 32 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதற்கான பணியை ராமு எம்.எல்.ஏ., நேற்று துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில், தேசிய நெடுஞ்சாலைக் கோட்டத்தின் செயற்பொறியாளர் சீனுவாசராம், உதவிப் பொறியாளர் சிவப்பிரகாசம், இளநிலைப் பொறியாளர் கிருஷ்ணகுமார், த.வெ.க., நிர்வாகிகள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.