மேலும் செய்திகள்
தவளக்குப்பத்தில் வடிகால் அமைக்கும் பணி
18-Apr-2025
பாகூர்: புதுச்சேரி பொதுப்பணித் துறை பொது சுகாதார கோட்டம் சார்பில், பாகூர் தொகுதி மதிக்கிருஷ்ணாபுரம், குறிஞ்சி நகரில் 25.50 லட்சம் ரூபாயிலும், சோரியாங்குப்பத்தில் 31.20 லட்சம் ரூபாயிலும் போர்வெல் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.அதே போல், சோரியாங்குப்பம் மேட்டு தெருவில், பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து சார்பில், 11 லட்சம் ரூபாய் செலவில், தார் சாலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான பூமி பூஜை நடந்தது. செந்தில்குமார் எம்.எல்.ஏ., பூமி பூஜை செய்து, பணிகளை துவக்கி வைத்தார்.நிகழ்ச்சியில், பொதுப்பணித்துறை சுகாதார கோட்ட செயற் பொறியாளர் உமாபதி, உதவி பொறியாளர் பீனாராணி, இளநிலை பொறியாளர் சிவாநந்தம், பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் உட்பட பலர் பங்கேற்றனர்.
18-Apr-2025