மேலும் செய்திகள்
ரூ.21.43 லட்சம் செலவில் வாய்க்கால் பாலம் பணி
22-Jul-2025
பாகூர் : குருவிநத்தம் சித்தேரி முதல் சோரியாங்குப்பம் மேம்பாலம் வரை தென்பெண்ணையாற்றின் வடக்கு கரையை பலப்படுத்தும் பணியை, செந்தில்குமார் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார். புதுச்சேரி பொதுப்பணித்துறை நீர் பாசன கோட்டம் சார்பில், பாகூர் தொகுதிக்கு உட்பட்ட, குருவிநத்தம் சித்தேரி முதல் சோரியாங்குப்பம் மேம்பாலம் வரை தென்பெண்ணையாற்றின் வடக்கு கரையை 33.43 லட்ச ரூபாய் செலவில் மேம்படுத்தி, பலப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான பூமி பூஜை நிகழ்ச்சி நடந்தது. செந்தில்குமார் எம்.எல்.ஏ., பூமி பூஜை செய்து, ஆற்றின் கரையை மேம்படுத்தும் பணியை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில், பொதுப்பணித்துறை நீர் பாசன பிரிவு உதவி பொறியாளர் செல்வராஜ், இளநிலை பொறியாளர் ஜெயரமணன், ஒப்பந்ததாரர் கேசவராமன் உட்பட பலர் உடனிருந்தனர்.
22-Jul-2025