உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சாலை அமைக்கும் பணி எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு

சாலை அமைக்கும் பணி எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு

வில்லியனுார்: சுல்தான்பேட்டை பகுதியில் தார் சாலை அமைக்கும் பணியை சிவா எம்.எல்.ஏ., பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார். புதுச்சேரி பொதுப்பணித்துறை சாலைகள் மற்றும் கட்டடங்கள் வடக்கு கோட்டம் சார்பில், ரூ. 1.61 கோடி திட்ட மதிப்பி ல் சுல்தான்பேட்டையில் உள்ள முஹம்மதியா நகர், ராஜா நகர், புதுச்சேரி மெயின்ரோடு குளம் முதல் அரசூர் சாலை சந்திப்பு வரை உள்ள பகுதிகளில் புதிய தார் சாலை அமைப்பதற்கு சிவா எம்.எல்.ஏ., பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் பொதுப்ப ணித்துறை சாலைகள் மற்றும் கட்டடங்கள் வடக்கு கோட்ட செயற்பொறியாளர் வைத்தியநாதன், உதவிப் பொறியாளர் சீனுவாசராம், இளநிலைப் பொறியாளர் குலோத்துங்கன் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை