உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கழிவுநீர் வாய்க்கால் பணி எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு

கழிவுநீர் வாய்க்கால் பணி எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு

வில்லியனுார்: வில்லியனுார் தில்லை நகரில் கழிவுநீர் வாய்க்கால் அமைக்கும் பணியை ரவிக்குமார் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார். வில்லியனுார் கொம்யூன் பஞ்சாயத்து சார்பில், ரூ. 28:13 லட்சம் மதிப்பில் தில்லை நகர் மெயின்ரோடு மற்றும் முக்கிய வீதிகளில் கழிவுநீர் வாய்க்கால் அமைப்பதற்கான பணிகளை ரவிக்குமார் எம்.எல்.ஏ., இன்று (நவ.,18) பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் வில்லியனுார் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் பிரபாகரன், உதவிப் பொறியாளர் சத்தியநாராயணன், ஒப்பந்ததாரர் தட்சிணாமூர்த்தி, என்.ஆர்.காங்., மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை