குழந்தைகள் தின விழா எம்.எல்.ஏ., பங்கேற்பு
புதுச்சேரி: உப்பளம் தொகுதி வாணரப்பேட்டை தாவிதுபேட்டை காமராஜ் அரசு நடுநிலைப்பள்ளியில் குழந்தைகள் தின விழா நடந்தது.விழாவில், அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., கலந்து கொண்டு, பள்ளி யில் நடந்த ஓவியம், வண்ணம் தீட்டுதல், கையெழுத்து பயிற்சி, வாசிப்பு பயிற்சி, இசை நாற்காலி மற்றும் ஓட்டப்பந்தயம் ஆகிய போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினார்.பள்ளி பொறுப்பாசிரியை வசுதா தலைமை தாங்கினார். ஆசிரியர் ஆனந்தராஜ் வரவேற்றார். தொகுதி செயலாளர் சக்திவேல், துணை செயலாளர் ராஜி, கிளை செயலாளர்கள் சந்துரு, இருதயராஜ், ராகேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.