போர்வெல் அமைக்க எம்.எல்.ஏ., பூமி பூஜை
வில்லியனுார்: ஊசுடு தொகுதியில் புதிய போர்வெல் மற்றும் கழிவுநீர் வாய்க்கால் அமைக்கும் பணியை கார்த்திகேயன் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார். புதுச்சேரி பொதுப்பணித்துறை குடிநீர் பிரிவு சார்பில், ரூ. 12.50 லட்சம் செலவில் ராமநாதபுரம் பேட் சமுதாய நலக்கூட்டத்தில் புதிய போர்வெல் அமைக்கும் பணியை கார்த்திகேயன் எம்.எல்.ஏ., பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை பொது சுகாதார கோட்ட செயற்பொறியாளர் சுந்தரி, கிராம குடிநீர் திட்ட உதவிப் பொறியாளர் சிவானந்தம், இளநிலைப் பொறியாளர் கார்த்திக், வில்லியனுார் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் பிரபாகர், உதவி பொறியாளர் சத்தியநாராயணன், இளநிலைப் பொறியாளர் பிரதீப்குமார் உட்பட பலர் உடனிருந்தனர். சேந்தநத்தம் கிராமத்தில் சுடுகாட்டிற்கு செல்லும் சாலையில் ரூ. 28:00 லட்சம் மதிப்பில் கழிவுநீர் வாய்க்கால் அமைக்கும் பணியை கார்த்திகேயன் எம்.எல்.ஏ., பூமி பூஜை செய்து பணியை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் கொம்யூன் பஞ்சாயத்து அதிகாரிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.