உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / இலவச மனைப்பட்டா வழங்க கோரி இயக்குனரிடம் எம்.எல்.ஏ., மனு

இலவச மனைப்பட்டா வழங்க கோரி இயக்குனரிடம் எம்.எல்.ஏ., மனு

புதுச்சேரி : உப்பளம் தொகுதியில் ஏழை மக்களுக்கு இலவச மனைப்பட்டா வழங்கும் திட்டம் தொடர்பாக ஆதி திராவிடர் நலத்துறை இயக்குனர் இளங்கோவனை சந்தித்து, அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., மனு அளித்தார். உப்பளம் தொகுதி ஆட்டுப்பட்டி, நேதாஜி நகர் 2 , வெங்காயத்தோப்பு, ரோடியர்பேட் பகுதிகளில் வசிக்கும் ஏழை மக்கள் மற்றும் பின்தங்கிய மக்களுக்கு இலவச மனைப்பட்டா அல்லது அடுக்குமாடி குடியிருப்புகள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டம் தொடர்பாக உப்பளம் தொகுதி எம்.எல்.ஏ., அனிபால் கென்னடி, முதல்வர், துறை அமைச்சர்களை சந்தித்து பேசி வலியுறுத்தி, ஏழை மக்களுக்கு நில உரிமை மனை பட்டா பெற்றுத் தருவதற்கு அரசு உறுதி அளித்துள்ளது.அதையடுத்து ஆதிதிராவிடர் நலத்துறை, சிறப்புக் கூறு நிதியின் கீழ் இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கான ஏற்பாடுகள் துவக்கியுள்ளது. இந்நிலையில், நலத்துறை இயக்குனர் இளங்கோவனை அவரது அலுவலகத்தில் அனிபால்கென்னடி எம்.எல்.ஏ., சந்தித்து கோரிக்கை மனு வழங்கினார். அதன் தொடர்ச்சியாக, அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., நில உரிமையாளர்களை நேரடியாக இயக்குனர் முன்னிலையில் அழைத்து சென்று பேச்சுவார்த்தை நடத்தி, அரசு நிலை மதிப்பில் இடங்களை ஒப்படைக்கும் வகையில் ஒப்பந்தம் செய்தார். தொகுதி துணை செயலாளர் நிசார், கிளை செயலாளர் காலப்பன், இருதயராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை