மேலும் செய்திகள்
Breaking நாகாலாந்து கவர்னர் இல. கணேசன் மரணம்
15-Aug-2025
புதுச்சேரி : புதுச்சேரி ரோடியர் மில், சுதேசி மில் ஊழியர்களுக்கு நிலுவை சம்பளத்தை வழங்க வலியுறுத்தி, பா.ஜ., எம்.எல்.ஏ., செல்வம் தலைமையில் பஞ்சாலை தொழிற்சங்கத் தலைவர்கள் குப்புசாமி, பாலா ஆகியோர் கவர்னரை சந்தித்தனர். சந்திப்பின் போது, தொழிலாளர்களுக்கு 12 மாத சம்பள பாக்கி, 3 வருட போனஸ் நிலுவையில் உள்ளது. இதனை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அதனை கேட்ட கவர்னர் விரைவில் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். அப்போது, தொழிற்சங்க நிர்வாகிகள் குப்புசாமி, பாலா, அசோகன், கிருஷ்ணமூர்த்தி, சண்முகம், ரவிச்சந்திரன் உள்ளிட்ட தொழிற்சங்க தலைவர்கள், நிர்வாகிகள் உடனிருந்தனர்.
15-Aug-2025