உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஜம்மு காஷ்மீர் சட்டசபையில் எம்.எல்.ஏ.,க்கள் கலந்துரையாடல்

ஜம்மு காஷ்மீர் சட்டசபையில் எம்.எல்.ஏ.,க்கள் கலந்துரையாடல்

புதுச்சேரி: ஜம்மு காஷ்மீர் சென்ற எம்.எல்.ஏ.,க்கள் அங்குள்ள சட்டசபை நிகழ்வுகள் குறித்து கலந்துரையாடினர். புதுச்சேரியில் இருந்து தற்காலிக சபாநாயகர் உட்பட எம்.எல்.ஏ.,க்கள் 17 பேர் ஜம்மு காஷ்மீருக்கு 5 நாள் சுற்றுப்பயணம் சென்றனர். அங்குள்ள சட்டசபை நிகழ்வுகள் மற்றும் நிர்வாக அமைப்புகள் குறித்து கலந்துரையாடி வருகின்றனர். தொடர்ந்து இன்று (நவ.,27) காஷ்மீர் சட்டசபையில், இரு மாநில நிகழ்வுகள் மற்றும் அனுபவங்கள் குறித்து கலந்துரையாடினர். அப்போது தற்காலிக சபாநாயகர் பேசுகையில், மாநில அந்தஸ்து பெறுவது குறித்து புதுச்சேரியை போல் ஜம்மு காஷ்மீருக்கும் எண்ணம் உள்ளதா என்பது குறித்து கேட்டறிந்தார். நிகழ்ச்சியில் அரசு கொறடா ஆறுமுகம், புதுச்சேரி எம்.எல்.ஏ.,க்கள், ஜம்மு காஷ்மீர் எம்.எல்.ஏ.,க்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை