உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / அஞ்சல் துறையில் மொபைல் வங்கி சேவை அறிமுகம்

அஞ்சல் துறையில் மொபைல் வங்கி சேவை அறிமுகம்

புதுச்சேரி : அஞ்சல் துறையில் மொபைல் வங்கி சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. புதுச்சேரி அஞ்சல் கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் இனகொல்லு காவ்யா செய்திக்குறிப்பு: அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியில் 2018ம் ஆண்டு முதல் 12 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் சேமிப்பு கணக்கு துவங்கியுள்ளனர். அதில், பல கணக்குகளில் வாரிசு நியமனம் செய்யப்படாமல் உள்ளது. சேமிப்பு கணக்கிற்கு வாரிசு நியமிப்பதன் மூலம் கணக்குதாரர், இறப்பிற்கு பின், கணக்கில் உள்ள தொகையை விரைவாக பெற முடியும். அதற்காக, அனைத்து வித சேமிப்பு கணக்குகளிலும் வாரிசு நியமனம் செய்ய தேவையான வசதிகள் மாநிலம் முழுதும் செய்யப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் மொபைலில் உள்ள பிளே ஸ்டோர் மூலம் ஐ.பி.பி.பி., ( இந்திய அஞ்சல் கட்டண வங்கி) செயலியை கொண்டும் வாரிசு நியமனம் மேற்கொள்ளலாம். ஐ.பி.பி.பி., வங்கி கணக்குடன், அஞ்சலக சேமிப்பு கணக்கை இணைந்து ஆன்லைன் பரிவர்த்தனைகள் மேற்கொள்ளலாம். பொது காப்பீடு நிறுவனங்களுடன் இணைந்து ரூ.555, 755 பிரிமியத்தில் ரூ.10 லட்சம் முதல் 15 லட்சம் வரையிலான தனிநபர் காப்பீடு திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், பைக், கார் வாகனங்களுக்கு காப்பீடு எடுக்கும் வசதியும், வியாபார கணக்கு மூலம் வியாபாரிகள் தங்கள் கடைகளில் யு.பி.ஐ., ஸ்டிக்கர் அட்டை மூலம் பணம் பெறும் வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி, அஞ்சலகங்களில் உள்ள பல்வேறு திட்டங்களின் பயன்களை பெறலாம். மேலும் விவரங்களுக்கு அருகில் உள்ள அஞ்சலகங்கள், பகுதி தபால்காரரை அணுகவும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ