உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மகன் வேலைக்கு செல்லாததால் தாய் தற்கொலை

மகன் வேலைக்கு செல்லாததால் தாய் தற்கொலை

காரைக்கால் : மகன் வேலைக்கு செல்லவில்லை என்ற வேதனையில் தாய் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். காரைக்கால், கோட்டுச்சேரி, பூவம் குப்புசெட்டி சாவடி பகுதியை சேர்ந்தவர் கண்ணிமுத்து மனைவி சாந்தா, 65; கூலி தொழிலாளி. கணவர் இறந்த நிலையில் சாந்தா பிள்ளைகளுடன் வசித்து வந்தார். இவரது இளைய மகன் பிரவீன்குமார் வெல்டிங் வேலை செய்து வந்தார். இவர் சரியாக வேலைக்குப் செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார்.இதனால், தாய், மகன் இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. மனமுடைந்த சாந்தா கடந்த 2ம் தேதி கரையான் மருந்தை குடித்தார். காரைக்கால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி சாந்தா உயிரிழந்தார். கோட்டுச்சேரி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி