உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தாய் மாயம் மகன் புகார்

தாய் மாயம் மகன் புகார்

புதுச்சேரி: வேல்ராம்பட்டு துலுக்காணத்தம் நகரை சேர்ந்தவர் விமல்,33; புதுச்சேரி பல்கலை கழகத்தில் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர். இவரது தந்தை கலியவரதன் கடந்த மூன்றாண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். இதனால் விமலின் தாய் சாந்தி,55 சற்று மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். கடந்த 18ம் தேதி மாலை 6:00 மணிக்கு வீட்டில் இருந்தவர் திடீரென காணாமல் போனார். விமல் புகாரின் பேரில், முதலியார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ