உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஏலச்சீட்டு நடத்தி ரூ. 32 லட்சம் மோசடி; தாய், மகள் மீது வழக்கு

ஏலச்சீட்டு நடத்தி ரூ. 32 லட்சம் மோசடி; தாய், மகள் மீது வழக்கு

புதுச்சேரி: அய்யங்குட்டிப்பாளையத்தில் ஏலச்சீட்டு பிடித்து பலரிடம் ரூ.32 லட்சம் மோசடி செய்த தாய், மகள் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.அய்யங்குட்டிப்பாளையம், சிவசக்தி நகரை சேர்ந்தவர் செல்வி (எ) ஆச்சி; பெட்டிக்கடை நடத்தி வந்தார். இவர், தனது மகள் ராமலட்சுமியுடன் இணைந்து, அப்பகுதியில் 1 லட்சம், 1.50 லட்சம் என, மாத ஏலச்சீட்டு பிடித்து வந்தார்.இவர்களிடம் தர்மபுரி, கல்கி நகரை சேர்ந்த தனியார் கம்பெனி ஊழியர் சங்கர், 41; என்பவர் ஏலச்சீட்டில் சேர்ந்து பணம் செலுத்தி வந்தார். கடந்த மார்ச் 21ம் தேதி செல்வி மற்றும் அவரது மகள் ஏலச்சீட்டு பணத்துடன் மாயமாகினர். இதையடுத்து, பாதிக்கப்பட்ட சங்கர் மேட்டுப்பாளையம் போலீசில் புகார் அளித்தார். அதில், மாயமான செல்வி, ஏலச்சீட்டு பிடித்து தன்னிடம் 7 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் ஏமாற்றியுள்ளார். மேலும், அப்பகுதியில் பலரிடம் இருந்து 32 லட்சம் ரூபாய் வரை மோசடியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். அதன்பேரில், செல்வி மற்றும் ராமலட்சுமி மீது மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை