உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / இரண்டு பிள்ளைகளுடன் தாய் மாயம்

இரண்டு பிள்ளைகளுடன் தாய் மாயம்

அரியாங்குப்பம் : குடும்ப பிரச்னையில், பிள்ளைகளுடன் தாய் மாயமானது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.ஓசூரை சேர்ந்தவர் சேகர். இவரது மனைவி லட்சுமி, 35. இவர்களுக்கு 9 வயதில் மகள், 7 வயதில் மகன் உள்ளனர். சேகர் தனது குடும்பத்துடன், கடந்த 8 மாதங்களுக்கு முன், அரியாங் குப்பம், அடுத்த காக்கையாந்தோப்பு பகுதியில் வீடு வாடகை எடுத்து தங்கியுள்ளார்.கணவன், மனைவி இருவரும் புதுச்சேரியில் உள்ள கருப்பட்டி காபி கடையில், வேலை செய்து வந்தனர். இருவருக்கும் இடையே ஏற்கனவே குடும்ப பிரச்னை இருந்தது. நேற்று முன்தினம் மனைவி லட்சுமியை சேகர் திட்டிவிட்டு, வேலைக்கு சென்றார். இரவு வீட்டிற்கு வந்து பார்த்தபோது மகள் மற்றும் மகனுடன் லட்சுமியை காணவில்லை. இதுகுறித்து, சேகர் அளித்த புகாரின் பேரில், அரியாங்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை