உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / இருளில் மூழ்கிய சாலை வாகன ஓட்டிகள் அவதி

இருளில் மூழ்கிய சாலை வாகன ஓட்டிகள் அவதி

புதுச்சேரி: அரும்பார்த்தபுரம்–புதுச்சேரி பைபாஸ் சாலை இருளில் மூழ்கியதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர். புதுச்சேரி நுாறு அடி சாலையில் இருந்து அரும்பார்த்தபுரம் செல்லும் பைபாஸ் சாலை, எப்போது பிசியாக இருக்கும். அரும்பார்த்தபுரம்–புதுச்சேரி பைபாஸ் சாலை வழியாக தினமும் 100க்கும் மேற்பட்ட கார், கனரக வாகனம், இருசக்கர வாகனங்கள் சென்று வருகின்றன. இந்நிலையில் நேற்று இரவு சாலையில் அமைக்கப்பட்டிருந்த மின் விளக்குகள் எதுவும் எரியவில்லை. இதனால் இச்சாலை முழுவதும் இருளில் மூழ்கியது. இதனால் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் கடந்து சென்றனர். இச்சாலையில் மின் விளக்குகள் எரிந்த போது இப்பகுதியில் வழிப்பறி சம்பவம் நடந்தேறியுள்ளது . எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து மின் விளக்கு எரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை