எம்.ஆர்.எப்., நிறுவனத்தில் புதிய ஊதிய உயர்வு ஒப்பந்தம் கையெழுத்து
புதுச்சேரி: நெட்டப்பாக்கம், எம்.ஆர்.எப்., நிறுவனத்தில் புதிய சம்பள உயர்வு ஒப்பந்தம் கையேழுத்தானது.எம்.ஆர்.எப்., நிறுவனத்தில் புதிய ஊதிய உயர்வு ஒப்பந்தம் தொழிலாளர் துறை சமரச அதிகாரி வெங்கடேசன் முன்னிலையில் நேற்று கையெழுத்தானது. ஒப்பந்தத்தின் மூலம் அதிகபட்சமாக ரூ. 13 ஆயிரத்து 500 வரை ஊதிய உயர்வு பெற்று 1500 தொழிலாளர்கள் பயனடைவர்.இதில், ஐ.என்.டி.யு.சி., தமிழ்நாடு மாநில தலைவர் ஜெகநாதன், புதுச்சேரி மாநில தலைவர் பாலாஜி, எம்.ஆர்.எப். நிறுவன கவுரவத் தலைவர் சபரி (எ) சுந்தரேசன், தீனதயாளன், பிரகாஷ், சிவா, முருகன், கணேசன் மற்றும் சங்கத்தினர் உடனிருந்தனர். தொழிலாளர் நலன் காக்கும் ஒப்பந்தம் ஏற்பட உறுதுணையாக இருந்த எம்.ஆர்.எப்., நிர்வாகத்திற்கும், அனைத்து தொழிற்சங்க தலைவர்களுக்கும், மறைந்த ஐ.என்.டி.யு.சி., மாநில தலைவர் ரவிச்சந்திரன் வழிகாட்டுதல்படி, புதுச்சேரி மாநில தலைவர் பாலாஜி தலைமையில் பயணிக்கும் அனைத்து தொழிலாளர்களுக்கும் ஐ.என்.டி.யு.சி., சார்பாக நன்றி தெரிவிக்கப்பட்டது.