உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / புதுச்சேரி கவர்னருக்கு முன்னேற்றக் கழகம் பாராட்டு

புதுச்சேரி கவர்னருக்கு முன்னேற்றக் கழகம் பாராட்டு

புதுச்சேரி: மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுத்த கவர்னர் கைலாஷ்நாதனுக்கு, அகில இந்திய முஸ்லீம் முன்னேற்றக் கழகம் பாராட்டு தெரிவித்துள்ளது.இதுகுறித்து, கழகத்தின் தலைவர் பங்காரு சாயபு வெளியிட்டுள்ள அறிக்கை:புதுச்சேரி கவர்னராக பதவியேற்ற நாளில் இருந்தே கைலாஷ்நாதன் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். புயல், கன மழையில் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டார். மேலும், பொதுமக்களை நேரில் சந்தித்து, பிரச்னைகளுக்கு தீர்வு காண உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டார்.மேலும், புதுச்சேரி அரசு மருத்துவமனையில் மாலை 5:30 மணி முதல், இரவு 7:00 மணி வரை சிகிச்சை பிரிவு துவங்க உத்தரவிட்ட கவர்னரை பாராட்டுகிறோம்.இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி