உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / முருங்கப்பாக்கம் சிவன் கோவில் கும்பாபிேஷகம்

முருங்கப்பாக்கம் சிவன் கோவில் கும்பாபிேஷகம்

அரியாங்குப்பம்: முருங்கப்பாக்கம் சங்காரபரணீஸ்வர் கோவில் கும்பாபிேஷக நடந்தது. வில்லியனுார் சாலை முருங்கப்பாக்கத்தில், புதியதாக கட்டப்பட்ட சங்காரபரணீஸ்வர் கோவில் நேற்று கும்பாபிேஷகம் நடந்தது. முன்னதாக கணபதி பூஜை, நவகிரக பூஜையுடன், கடந்த 31ம் தேதி, கும்பாபிேஷக நிகழ்ச்சி துவங்கியது. மறுநாள் 1ம் தேதி, புதிய விக்கிரகங்களுக்கு கண் திறத்தல், முதற்கால யாக பூஜையும் நடந்தது. அதனை தொடர்ந்து, 2ம் தேதி, இரண்டாம் மற்றும் மூன்றாம் கால யாக பூஜைகள் செய்யப்பட்டது. நேற்று முன்தினம், நான்காம் கால யாக பூஜையும், காலை 9:00 மணியில் இருந்து 10:30 மணியவில், சங்காரபரணீஸ்வர் கோவில் விமானத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிேஷகம் நடந்தது.தொடர்ந்து, கோவில், உட்பிரகாரத்தில் உள்ள ஐயனாரப்பன் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிேஷகம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை