ஆரோவில்லில் இசையஞ்சலி
வானூர்: ஆரோவில் அரபிந்தோ அரங்கில், மறைந்த தபேலா இசைக் கலைஞர் ஜாகிர் ஹூசைனுக்கு இசையஞ்சலி செலுத்தப்பட்டது.உலகப் புகழ்பெற்ற தபேலா இசைக்கலைஞர் ஜாகிர்ஹூசைன் உடல்நலக்குறைவால் அமெரிக்கா சான் பிரான்சிஸ்கோவில் உள்ள மருத்துவமனையில் அண்மையில் உயிரிழந்தார்.இவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் சர்வதேச நகரமான ஆரோவில் ஸ்ரீ அரபிந்தோ அரங்கில் இசையஞ்சலி நிகழ்ச்சி நடந்தது. இதில், வயலின் மேதை ஸ்ரீ வித்தல் ராமமூர்த்தி, மிருதங்க கலைஞர் டாக்டர் ரமேஷ் ஸ்ரீனிவாசன் ஆகியோர் பங்கேற்று, கீர்த்தனைகள் பாடி இசையஞ்சலி செலுத்தினர்.மேலும், ஜாகிர் ஹூசைனுடனான தங்களது அனுபவங்கள், நினைவுகளை பகிர்ந்துகொண்டனர். நிகழ்ச்சியில் உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த இசைக்கலைஞர்கள், ஆரோவில் வாசிகள் உள்ளிட்ட 400க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.