உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பாரதிதாசன் கல்லுாரியில் முத்தமிழ் மன்ற விழா 

பாரதிதாசன் கல்லுாரியில் முத்தமிழ் மன்ற விழா 

புதுச்சேரி : புதுச்சேரி பாரதிதாசன் அரசினர் மகளிர் கல்லுாரியில் தமிழ்த்துறை சார்பில், முத்தமிழ் மன்ற விழா நடந்தது.தமிழ்த்துறை பேராசிரியர் கீதா வரவேற்றார். கல்லுாரி முதல்வர் வீரமோகன் தலைமை தாங்கினார். தமிழ்த்துறை தலைவர் சேதுபதி முத்தமிழாகிய இயல், இசை, நாடகம் குறித்து நோக்கவுரை ஆற்றினார்.ஆவணப்பட இயக்குநர் கலைமாமணி ராஜமாணிக்கம் 'இசையோடும் தமிழோடும்' என்ற ஆவணப்படத்தை வெளியிட்டு, மாணவியருடன் கலந்துரை யாடினார். செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவன ஆய்வறிஞர் பத்மநாபன் 'யாப்பும் இசையும்' தலைப்பில் இசைப்பேருரை நிகழ்த்தினார். மாணவி ரீட்டா மரி திரெஸ் தொகுத்து வழங்கினார். மாணவி நிஷா நன்றி கூறினார்.ஏற்பாடுகளை தமிழ்த்துறை உதவி பேராசிரியர்கள் மாதரசி, கீதா, சந்திரகலா, ராஜகுமாரி ஆகியோர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி