உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / முத்துராமலிங்க தேவர் 117வது ஜெயந்தி விழா

முத்துராமலிங்க தேவர் 117வது ஜெயந்தி விழா

புதுச்சேரி: பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 117வது ஜெயந்தி மற்றும் 62-வது குருபூஜை விழா, பாலாஜி தியேட்டர் அருகில் நடந்தது.புதுச்சேரி மாநில பேரவை மாநிலத் தலைவர் குணா சிங், நிர்வாகிகள் அருணகிரி கதிரேசன் முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக எதிர்க்கட்சித் தலைவர் சிவா உருளையன்பேட்டை தி.மு.க., தொகுதி பொறுப்பாளர் கோபால் ஆகியோர் அவரது படத்திற்கு மலரஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து ஏராளமான பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.நிகழ்ச்சியில் தி.மு.க., தொகுதி செயலாளர் சக்திவேல், இளைஞர் அணி நிர்வாகிகள் ரெமி, தாமரை, தொகுதி பொருளாளர் சசி, கிளை செயலாளர்கள் விஜயகுமார், அகிலன், இளங்கோ, வெங்கட், அழகர், தமிழ்ச்செல்வன் மற்றும் தேவர் பேரவை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை