மேலும் செய்திகள்
கஞ்சா விற்பனை: 2 வாலிபர்கள் கைது
28-Oct-2026
புதுச்சேரி: கிருமாம்பாக்கம் பகுதியில், போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் அதிரடி சோதனை செய்தனர். புதுச்சேரி போதை பொருள் தடுப்பு பிரிவு சீனியர் எஸ்.பி., தீபிகா உத்தரவின் பேரில், போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார் மற்றும் கிருமாம்பாக்கம் போலீசார் இணைந்து நேற்று (நவ.,4) இரவு கூட்டு ரோந்து மற்றும் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர். போதை பொருள் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் ரமேஷ், கிரும்பாக்கம் சப் இன்ஸ்பெக்டர் சண்முகசத்யா ஆகியோர் தங்களது குழுவினருடன் இணைந்து, அரியங்குப்பம் முதல் -முள்ளோடை வரையிலான இருண்ட மற்றும் தனிமையான சாலைப் பகுதிகளிலும், பரிகல்பட்டு ஏரிக்கரை உள்ளிட்ட ஒதுக்குப்புறமான பகுதிகளிலும் தீவிர ரோந்து மற்றும் திடீர் சோதனைகளை மேற்கொண்டனர். அப்போது, சந்தேகத்திற்கிடமான நபர்களிடம் விசாரணை மற்றும் வாகனங்களை சோதனை செய்தனர்.
28-Oct-2026