உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தேசிய அளவிலான சாம்பியன்ஷிப் போட்டி

தேசிய அளவிலான சாம்பியன்ஷிப் போட்டி

புதுச்சேரி அணிகள் பங்கேற்புபுதுச்சேரி: தேசிய அளவிலான பள்ளி விளையாட்டு சாம்பியன்ஷிப் டேபிள் டென்னிஸ், கூடைப்பந்து போட்டியில் புதுச்சேரி அணிகள் பங்கேற்றுள்ளது.தேசிய அளவிலான பள்ளி விளையாட்டு கூடைப்பந்து போட்டி, சதிஷ்கர் மாநிலம், ராஜ்நந்தகானில் கடந்த 18ம் தேதி துவங்கி நாளை 22ம் தேதி வரை நடக்கிறது. இதில் நாட்டின் பல்வேறு பகுதியில் இருந்தும் பள்ளி அளவிலான அணிகள் பங்கேற்றுள்ளது. இதில், புதுச்சேரி மாநில பள்ளி மாணவர்கள் அணியும் பங்கேற்றுள்ளது.அதுபோல் தேசிய அளவிலான பள்ளி விளையாட்டு டேபிள் டென்னிஸ் ஆண்கள் மற்றும் பெண்கள் அணிக்கான போட்டிகள், டாமன் டையூவில் நடந்து வருகிறது. இதிலும் புதுச்சேரி ஆண்கள் மற்றும் பெண்கள் டேபிள் டென்னிஸ் அணி பங்கேற்றுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி