உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தேசிய ஆசிரியர் சங்கத்தின் மாநில நிர்வாக குழு கூட்டம்

தேசிய ஆசிரியர் சங்கத்தின் மாநில நிர்வாக குழு கூட்டம்

புதுச்சேரி: தேசிய ஆசிரியர் சங்கத்தின் மாநில நிர்வாக குழு கூட்டம் நடந்தது. மாநில தலைவர் பாட்ஷா தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் தீபக் உச்சம் தீர்மானம் வாசித்தார். பொருளாளர் ராஜ்குமார் முன்னிலை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர்கள், மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டனர். செப்., 1ம் தேதி நாடு முழுதும் ஒருநாள் நமது பள்ளி, நமது பெருமை என்ற தலைப்பில் 5 லட்சம் பள்ளிகளில் ஆசிரியர் மாணவர்களின் உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சியினை அகில பாரதிய ராஷ்ட்ரிய மகா சங்கம் நடத்துகிறது. புதுச்சேரி, காரைக்கால், மாகி, ஏனாமில் இந்நிகழ்ச்சியை நடத்துவதற்கு கல்வித்துறை இயக்குநரிடன் அனுமதி பெறுவதற்கு கடிதம் கொடுப்பது என, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நமது பள்ளி நமது பெருமை திட்டத்தின் மாநில ஒருங்கிணைப்பாளராக செந்தமிழ் செல்வன், மாநில இணை செயலாளர் வேலாயுதம், காரைக்கால் மாவட்ட தலைவர் விஜயா உதவி ஒருங்கிணைப்பாளராக வேலாயுதம் ஆகியோரை நியமிக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை