உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தேசிய யோகா போட்டி: புதுச்சேரி அணி பங்கேற்பு

தேசிய யோகா போட்டி: புதுச்சேரி அணி பங்கேற்பு

திருக்கனுார்: தேசிய அளவில் பள்ளிகளுக்கு இடையேயான யோகா போட்டியில் புதுச்சேரி அணி பங்கேற்றுள்ளது. தமிழ்நாடு, பொள்ளாச்சி திஷா எ லைப் பள்ளியில் 68வது தேசிய அளவில் பள்ளிகளுக்கு இடையேயான யோகாசனம் போட்டிகள் கடந்த 17ம் தேதி முதல் துவங்கி நடந்து வருகிறது. இப்போட்டியில் புதுச்சேரி, தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட இந்தியாவின் 28 மாநில அணிகள் கலந்து கொள்கின்றன. இதில் புதுச்சேரி சார்பில், 14 வயதுக்கு உட்பட்ட பிரிவில் பயிற்சியாளர் அருள் பிரசாத், மேலாளர் சித்தானந்தம் தலைமையில் கிரிஷ், யுதிஷ்ராஜ், பிரிஸ்டன் கேனித், தேவேஷ் கிருஷ்ணா, சர்வேஸ்வரன், பிரின்ஸ் டார்வின், சுதன் உள்ளிட்ட மாணவர் அணியினர் கலந்து கொண்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை