உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / இயற்கை சுற்றுலா பூங்கா கவர்னர் பார்வையிட்டார்

இயற்கை சுற்றுலா பூங்கா கவர்னர் பார்வையிட்டார்

புதுச்சேரி : புதுச்சேரி ரோட்டரி பீச் டவுன் சங்கம் சார்பில், மேட்டுப்பாளையம் போக்குவரத்து முனையத்தில் உருவாக்கப்பட்டுள்ள மியாவாக்கி இயற்கை சுற்றுலா பூங்காவை கவர்னர் கைலாஷ்நாதன் பார்வையிட்டார்.தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடியின் 'தாயின் பெயரில் ஒரு மரம்' திட்டத்தின் கீழ் இயற்கை சுற்றுலா பூங்காவில் மரக்கன்று நட்டார். பின்னர். மியாவாக்கி பூங்காவை உருவாக்கி பராமரித்து வருபவர்களை சிறப்பித்து, சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக அங்கு சுவரில் வரையப்பட்டிருந்த ஓவியத்தின் கீழ் கையொப்பமிட்டார்.மேலும், பூங்காவைநல்ல முறையில் பராமரிக்கவும், புதுச்சேரியின் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில் இது போன்ற குறுங்காடுகள் பலவற்றை உருவாக்கவும் கவனம் செலுத்த வேண்டும் என்று ரோட்டரி சங்கத்தினரை கேட்டுக் கொண்டார்.சங்கத்தின் தலைவர் வினோத் ஷர்மா, செயலர் பிரகாஷ், திட்டத் தலைவர் புருஷோத்தமன் ஆகியோர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !