மேலும் செய்திகள்
லட்சுமி நரசிம்மர் கோவிலுக்கு பாத யாத்திரை
06-Jan-2025
புதுச்சேரி: முத்தியால்பேட்டையில் நாளை நவ நரசிம்மர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை நடக்கிறது.புதுச்சேரி முத்தியால்பேட்டை, ராமகிருஷ்ணா நகரில் உள்ள ஸ்ரீலட்சுமி ஹயக்ரீவ பெருமாள் கோவில் அருகே (வடக்கே) நவ நரசிம்மர் கோவில் நிர்மாணிக்கப்பட உள்ளது.ஸ்ரீ அகோபில ேஷத்திரத்தில் அருள்பாலிப்பது போன்று நவ நரசிம்மர்களுடன், தச நரசிம்மராக பானக நரசிம்மரும் ஒரே சந்நிதியில் அருள்பாலிக்கும் வண்ணம் அமைக்கப்படவுள்ள இக்கோவிலுக்கான பூமி பூஜை நாளை 25ம் தேதி காலை நடக்கிறது.அதனையொட்டி, நாளை காலை 8:45 மணிக்கு பகவத் அனுக்ஞை, புண்யாஹவாசனம், லஷ்மி, சுதர்சன மற்றும் வாஸ்து சாந்தி ேஹாமங்கள் நடக்கிறது. காலை 10:00 மணிக்கு பூர்ணாஹூதியை தொடர்ந்து, 10:31 மணி முதல் 10:42 மணிக்குள் பூமி பூஜை நடக்கிறது.விழாவில் கவர்னர் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமி, பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன், பிரகாஷ்குமார் எம்.எல்.ஏ., ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.விழா ஏற்பாடுகளை வேத ஆகம சம்ரக் ஷண லஷ்மி சரஸ் மாருதி ட்ரஸ்ட் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
06-Jan-2025