நீட், ஜே.இ.இ., பயிற்சி பட்டறை
புதுச்சேரி: புதுச்சேரி கல்வித்துறை சார்பில், நீட், ஜே.இ.இ., ஒரு நாள் பயிற்சி பட்டறை லாஸ்பேட்டை மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனத்தில் நடந்தது.பள்ளி கல்வி இணை இயக்குனர் சிவகாமி வரவேற்றார். பயிற்சி பட்டறையை கல்வித்துறை இயக்குனர் பிரியதர்ஷினி துவக்கி வைத்தார். கலெக்டர் குலோத்துங்கன் சிறப்புரையாற்றி, பயிற்சி பட்டறையில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு நீட், ஜே.இ.இ., பயிற்சி புத்தகங்களை வழங்கினார். ஆஹா குரு அகாடமி விரிவுரையாளர் பாலாஜி சம்பத், கோமதி, தாரா, சாந்தி ஆகியோர் மாணவர்களுக்கு பயிற்சி அளித்தனர். இப்பயிற்சி பட்டறையில் 350 அரசு பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவன முதல்வர் சுகுணா வாழ்த்துரை வழங்கினார். துணை முதல்வர் ராஜவேலு சுகந்தி நன்றி கூறினார்.