உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சபாநாயகருக்கு நேரு எம்.எல்.ஏ., கண்டனம்

சபாநாயகருக்கு நேரு எம்.எல்.ஏ., கண்டனம்

புதுச்சேரி: மாணவர்கள் குறித்து பேச்சுக்கு சபாநாயகர் வருத்தம் தெரிவிக்க வேண்டும் என நேரு எம்.எல்.ஏ., வலியுறுத்தியுள்ளார்.இதுகுறித்து அவரது அறிக்கை:சபாநாயகர் செல்வம் தனியார் பள்ளிகளில் படித்த மாணவர்களை அவமானபடுத்தும் விதமாக பேசியுள்ளார். கல்வி சேவையில் நூற்றாண்டை நோக்கி பயணிக்கும் பள்ளிகளை அவமரியாதை செய்யும் வகையிலும் பேசியது கண்டிக்கத்தக்கது. இது மாணவர்கள், பெற்றோர்கள், சிறுபான்மையினர் பள்ளிகளிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அரசு துறையில் பணிபுரியும் அதிகாரிகள் பலர் தனியார் பள்ளிகளில் படித்தவர்கள். அவர்களையும் சபாநாயகர் சைக்கோ என சொல்வாரா, குடியரசு தின விழாவில் தனியார் பள்ளிகளுக்கு விருது மற்றும் கேடயம் வழங்கும் அரசையும் சபாநாயகரின் பேச்சு கொச்சைப்படுத்தியுள்ளது. தனது செயல்பாடுகளில் சுப்ரீம் கோர்ட் கூட தலையிட முடியாது என கூறும் அளவுக்கு சபாநாயகர் பேச்சு ஆணவமாக உள்ளது. சபாநாயகர் மருத்துவரிடம் தனது மனநலத்தை பரிசோதிக்க வேண்டும். அவர் பேச்சுக்கு உடனே வருத்தம் தெரிவிக்க வேண்டும். இல்லாவிட்டால் போராட்டங்களை சந்திக்க நேரிடும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை